கொங்கு மண்டல சதகம் கூறும் அந்துவர் பெருமை!
தமிழில் நூறு பாடல்களைக் கொண்டு பாடப் பெறும் இலக்கியம் 'சதகம்' எனப்படும். இவ்வகைச் சதக இலக்கியங்கள் தமிழகத்தின் வரலாற்றை அதன் பிரதான மண்டலங்களின் பெயர்களில் இயற்றப்பெற்று கிடைப்பது மிகச் சிறப்பாகும். இந்த வகை சதகங்கள் அந்தந்த மண்டலங்களின் அரசர்கள், அவரின் தசாங்கங்கள், ஆட்சிப்பிரிவுகள், வேளிர்கள், வள்ளல்கள், குடிகள், புகழ்பெற்ற புலவர்கள், தலங்கள், தெய்வத் திருவிளையாடல்கள், பெருமை தரும் நிகழ்வுகள் என புராணம்-இதிகாசம்-வாய்மொழிக் கதைகள் எல்லாம் ஒன்றுசேர நமக்கு வரலாற்றினைத் தருகின்றன.
கார்மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், தொண்டை மண்டல சதகம் என தமிழகத்தின் பிரதான மண்டலங்களின் சதகங்கள் இன்று நமக்கு அச்சில் கிடைக்கின்றன. இவற்றில் கொங்கு மண்டல சதகம் இயற்றியோர் மூவர் ஆவர். வாலசுந்தரக்கவிஞர், கார்மேகக் கோனார், கம்பநாதசாமி ஆகிய புலவர் மூவரும் மூன்று நூல்கள் என கொங்கின் பெருமைகளை தாங்கிய 300 பாடல்கள் நமக்கு கிடைப்பது பெரும்பாக்கியம் ஆகும். இவற்றின் காலம் முறையே 7, 13, 17 என கூறப்பட்டுள்ளது ஆய்விற்குரியது.
வேளாளர்கள் 18 குடிகளையும் 'விரும்பி ஓம்புவதால்' வேளாளர் எனப்பட்டனர். அத்தகைய ஓம்புதலுக்கு ஆதாரமாக நின்றது உழவு. காடு கொன்று நாடாக்கி குளம் தொட்டு வளம் பெருக்கி கோயில் கட்டிக் குடிபுகுந்து வேளாளர்கள் தலைமை தாங்கி நடைபெறுவதாகவே ஊராட்சிகளும், நீதி வழங்கலும் அரசர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டது. நாடாக்குதல் எனும் செயல்முறையே வேளாளர் குடியேற்றத்தைக் குறிப்பதாகும். ராஜியங்கள் மாறினாலும் தர்மம் சிதையாமல் இருக்க பாரம்பரியமாக தர்ம பரிபாலனம் தொடர்ந்து வரும்படிக்கு வேளாளர்களைக் கொண்டு சித்திரமேழி நாட்டார் எனும் நாட்டாட்சி முறையை தமிழகத்தில் மூவேந்தர்களும் சேர்ந்து நிலைநாட்டியிருந்தனர். அத்தகைய பார்வையோடு மண்டலங்கள் எனும் இந்த நாடுகளின் பெருமையிலும் வேளாளர் பெருமைகள் வெகுவாறு பாராட்டப்பெற்றுள்ளது.
கொங்கு நாட்டின் வேளாளர் குடிகளில் தமக்கான தனிச்சிறப்பு மிக்கதோர் வரலாற்றினை உடையவர்கள் அந்துவர்கள். அந்துவர்களைப் பற்றி மூன்று பாடல்கள் கொங்கு மண்டல சதகங்களில் கிடைக்கின்றன. மூன்றுமே மிகச் சிறப்பான வரலாற்று அடிப்படையினை உடையது. சதகம் கூறும் நேர் பொருளும், அவை காட்டும் ஆய்வு நோக்கையும் இக்கட்டுறையில் விரிவாகக் காணலாம்.
பாடல்-1:சுந்தரன் பாடல் தமிழ்தனைக் கேட்டவர் தூது சென்றுபுந்தியி லெண்ணி மகிழ்ந்தவர் கூறவும் பொய்யென்றதைசந்தேகந்தீர வயிற்றையும் பீறித்தன் நாவரிந்துவந்தது மந்துவ கோத்திரம் வாழ்கொங்கு மண்டலமே- கம்பநாத சாமிகள் (கொங்கு மண்டல சதகம் - 20)
https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=244https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=276 சைவக் குரவர் நால்வருள் ஒருவரான சிவபெருமானின் தோழர் என அழைக்கப்பெறும் சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடலைக் கேட்ட ஈசன் அவரது காதல் துயரது நீக்க அவர் மனைவியிடம் திருவாரூர் தெருவினில் நடந்தே தூது சென்றாராம். இக்கதையை தம் புத்தியினுள் எண்ணி மகிழ்ந்து கூறவும், இல்லை அது பொய் என்று மற்றொருவர் கூறவும், தான் அது உண்மையென்றே உறுதி செய்யும் பொருட்டு தன் வயிற்றையும் பீறி, நாவையும் அரிந்து வந்த அந்துவன் கோத்திரத்தவர் வாழ்வது கொங்கு மண்டலமாம்! இது அந்துவன் கூட்டத்தாரின் வாய்மைக்கு சான்றாக விளங்கும் பாடல்களில் ஒன்றாகும்.
பாடல்-2:அற்றது பொருதப் பாடி யவ்வைக் கடிமையென்றுபெற்றவன் கீர்த்தி கங்கா குலயோகப் பிரபலனாம்முத்தமிழ் வாணர்க்கு வேண பவுசுமின் பாய்க் கொடுத்துவைத்தவன் அந்துவ கோத்திரத் தோன்கொங்கு மண்டலமே
- கம்பநாத சாமிகள் (கொங்கு மண்டல சதகம் - 84)
அறுந்த பழம் மீண்டும் பொருந்தும் படியாக தன் தமிழ்த்திறத்தை வெளிப்படுத்திய அவ்வைக்கு அடிமை என்று பெற்ற புகழும், உயர் கங்கை குலம் அடைந்த யோகத்தால் விளைந்த பிரபலனும், முத்தமிழ் புலவர்கள் வேண்டும் பரிசுகள் பலவும் இன்பம் அளிக்கும் வகையில் கொடுத்து வைத்தவனும் ஆகிய அந்துவன் கோத்திரன் வாழ்வது கொங்கு மண்டலமாம்! இது அந்துவன் கூட்டத்தாரின் தமிழ்ப் பற்றும், பாவலரை புரக்கும் வள்ளாண்மையையும் விளக்கும் பாடலாகும்.
பாடல்-3:
அற்றது கூடவுஞ் சுந்தரர் பாடற் கடிமையேன்றேபெற்றவன் பெற்றவன் பெற்றவன் காண்பிர வேசிதன்னைமுத்தமிழ் வாணற்கு வேளூர ரப்பர்முன் பாய்க்கொடுத்துவைத்தது மந்துவன் பெத்தான் வளர்கொங்கு மண்டலமே.- வாலசுந்தரக் கவிராயர் (கொங்கு மண்டல சதகம் - 84)
https://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=194 இப்பாடல் சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்களுக்கு அடிமையென்று தன்னை அறிவித்துக் கொண்ட அந்துவன் கோத்திரத்தைச் சேர்ந்த பெத்தான் என்பவர் விலை மாது ஒருத்தியை வேளூரர் அப்பர் (?) முன்பாக தமிழ் புலவர்கள் வேண்டவும் அவர்களுக்கு உடனே கொடுத்தார் என்பது செய்தி. இது சிவனடியார்களுக்கும் தமிழ் புலவர்களுக்கும் கேட்டதை அளிக்கும் நெறியாளர்களாகவும் புரவலர்களாகவும் விளங்கியவர்கள் அந்துவன் கூட்டத்தார் என்று எடுத்தியம்பும் பாடலாகும்.
ஆய்வுக் கோணங்கள்:
------------------------ *******[சேர்க்கப்படும்]******** --------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...