ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

கல் பேறு அதியன் அந்துவன் - ஓர் ஆய்வு!

பாரதத்தில் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை எழுதப் பயன்படுத்தப்பட்ட பழமையான எழுத்து முறை பிராமி எனப்படுகிறது.  தமிழை எழுதப் பயன்படுத்தப்படும் பிராமி வடிவத்தை தமிழி என்ற பெயர் கொண்டும் அழைக்கின்றனர்.

பாரதம் நெடுக இதுவரை கிடைத்துள்ள பிராமி எழுத்துவடிவம் பொறித்த கல்வெட்டுகளில் அசோகரின் கல்வெட்டுகளே பழமையானது எனக் கருதப்பட்டு வந்தது.
இதற்கிடையே மதுரை அருகே புலிமான் கோம்பையில் கிடைத்துள்ள நடுகல்லில் இவ்வகை தமிழி பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளது. ஏறக்குறைய 2400 வருடங்கள் பழமையானது இக்கல்வெட்டு என்று தற்போது கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள். 

இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது இது என்றும் ஆய்வறிஞர்கள் கூறுகின்றனர். 


மேற்படி கல்வெட்டு வரிகள் வாசிக்கப்பட்டதில் பிழை இருப்பதை ர.பூங்குன்றன் அவர்கள் விளக்கி பின் வருமாறு வாசிக்கிறார்:

" ... கல்பேறு
அதியன் அந்துவன்
கூடலூர் ஆகோள் ... "

... ஆநிரைச் செல்வங்கள் (பெற்றம்) மிக்கவனான அதியன் குடியில் வந்த அந்துவன் என்பான் கூடலூரில் ஆநிரைகளை கவரச் செல்லும்போது.... வீர மரணம் அடைந்ததற்காக நடுகல் வைத்து வழிபட்டு இச்செய்தியைப் பொறித்துள்ளனர்.




ஏன் இது மிக முக்கியத்துவம் பெறுகிறது?


வரலாற்றில் ஒரு பெரும் வீரனின் பெயரில் கல்வெட்டுக் கிடைத்திருப்பதும், அது பாரதத்தின் மிகப் பழமையான கல்வெட்டு என்பதும், அதில் அந்துவன் என்னும் வீரன் பெயர் இடம் பெற்றுள்ளதும், அந்துவன் என்பது தமிழகத்தில் கொங்கு நாட்டில் வெள்ளாள கவுண்டரின் ஒரு கோத்திரப் பெயர் என்பது நமது பாரதத்திற்கும், தமிழர்க்கும், கொங்கர்க்கும், வெள்ளாளர்/வேளாளர்க்கும், அந்துவன் கூட்டத்தார்க்கும் பெருமை தருவதாகும்.

நமது குடிப் பெயர் (கோத்திரம்/வம்சாவளி) நமது தொன்மையை பறைசாற்றுகிறது என்றால் மிகையல்ல.

கொங்கு நாட்டில் வாழ்ந்த மக்களை "ஆகெழு கொங்கர்" , "கொங்கர் ஆ பரந்தன்ன" என்று ஆநீரைச் செல்வத்தோடு ஒப்பிட்டு இலக்கியங்கள் புகழ்கின்றன. அவர்கள் வீரத்திலும் சிறந்தவர்கள் எனும்படிக்கு "ஒளிருவாட் கொங்கர்" எனப்பட்டுள்ளனர். அந்துவன் என்னும் இக்குடிப் பெயர் கொங்க வெள்ளாளரிடையே மட்டும் வழக்கில் இருந்து வருவதாலும், இன்றும் கொங்கு நாட்டுக் ஆவினமான காங்கேயம் இனக் காளைகள் உலகப் பிரசித்திப் பெற்றவை என்பதாலும். ஆகோளில் இடம் பெற்ற அப்பெரும் வீரன் வஞ்சி வேளிரான கொங்க வெள்ளாள அந்துவரின் வம்சத்தில் வந்தவனாக இருக்க வாய்ப்பதிகம். மேலதிக ஆதாரங்கள் கிட்டின் அஃது நிறுவப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...