கங்கை வம்சத்து வேளிர் குல மக்களான வெள்ளாளர்கள் தம் இயல்பிலேயே நீதி, நேர்மை தவறாது உண்மை உரைத்தல், மன்றில் சான்றுடன் வார்த்தையாடுதல், வாக்கு தவறாது சொல்லியன முடித்தல் என வாழ்ந்து தம் வழியினருக்கு இலக்கிய இலக்கணமாய் நின்று புகழ் எய்தியவர்கள்.
வெள்ளாளர்களின் சொன்ன சொல் நிலையாய் நிற்றல் என்னும் பண்பிற்கு அந்துவன் குலத்தார் கிரீடமாய் விளங்கினர் என்றால் மிகையில்லை.
அந்துவன் குலத்தாரை சுட்டுமிடமெல்லாம் அவர்தம் இத்தலையாய பண்பை இலக்கியங்கள் புகழ்ந்து பாராட்டி உள்ளது சிறப்பு. அவ்வாறான பாடல்களை இங்கு காண்போம்.
தூரம்பாடி காணிப்பாடல்:
"தூறைவேட் டுவன்ஆந்தை சொல்லுநிலை அந்துவன்
வீரையுள மயிலன் மெய்ச்செட்டி - நீரைநுதல்
தீட்டு முதலய்ந்து செழித்திடும் தென்கரை
நாட்டிலுயர் தூரை நகர்"
சொல்லிய சொல்லில் மாறுபடாது அதில் நிலையாக நின்று நடப்பவர் அந்துவர் என்கிறது பாடல்.
அந்துவன் குலத்தார் காணிப்பாடல்:
"நன்னிலம் புகழ்கின்ற நாகம்பள்ளி கீரனூர்
நற்பால மேடு அதுவும்
நளினமுள லக்கா புரத்துடன் திருவாச்சி
நலகுந்தி ஆதியூரும்
சென்னெல்வயல் சூழ்நிலை மோடமங் கலமதும்
செழித்ததூ ரம்பாடியும்
செயமருவு அஞ்சியூர்ப் பதியுடன் மிக்கவாம்
செப்பமுள காணிபெற்றாய்
சொன்னமொழி தவறாத அந்துவ குலத்தில்வரு
சுகசரண கெம்பீரனே
சுந்தர மடந்தையர்கள் விரதமத ரூபனே
சொற்பனுட மகமேருவே
தன்மையது வாகவே நம்புலவன் என்று நீ
தாபரித் திடும்பவுளித்
தாட்டீக சென்னியருள் செல்லமகி பாலனே
தாடளர் பரிநகுலனே!"
அந்துவன் குலத்தார் சொன்ன சொல் தவறாதவர், வாக்கு தவறாதவர் என்கிறது இப்பாடல்.
சங்க இலக்கியம் - புறநானூறு:
"மடங்கலின் சினைஇ, மடங்கா உள்ளத்து,
அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து,
என்னொடு பொருதும் என்ப; அவரை
ஆர் அமர் அலறத் தாக்கி, தேரொடு
அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த 5
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக;
அறன் நிலை திரியா அன்பின் அவையத்து,
திறன் இல் ஒருவனை நாட்டி, முறை திரிந்து
மெலிகோல் செய்தேன் ஆகுக; மலி புகழ்
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் 10
பொய்யா யாணர் மையல் கோமான்
மாவனும், மன் எயில் ஆந்தையும், உரைசால்
அந்துவஞ் சாத்தனும், ஆதன் அழிசியும்,
வெஞ் சின இயக்கனும், உளப்படப் பிறரும்,
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த 15
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ,
மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த
தென் புலம் காவலின் ஒரீஇ, பிறர்
வன் புலம் காவலின் மாறி யான் பிறக்கே!"
பாடல்: 71
திணை: காஞ்சி;
சேர, சோழர் சிங்கம் போல் சீறிக் கொண்டு தன் மேல் போர் தொடுத்து வருவது அறிந்த பாண்டியன் அவர்களை தம் படையோடும் தேரோடும் புறமுதுகிட்டு ஓடச் செய்வேன் என்று வஞ்சினம் உரைக்கிறான்.
அது முடியாத போது தான் பெற்ற பேறுகளையும், நலன்களையும், வளங்களையும் இப்பிறவியில் இறந்தும், அடுத்த பிறவியிலும் பாண்டியர் குடியினும் கீழான குடியிற் பிறக்க என்கிறான்.
தான் பெற்ற பெரும் நலன்களாக அவைக்களத்தே வீற்றிருக்கும் நண்பர்களான ஐவரை சுட்டுகிறான் பாண்டியன்.
அவர்களில் அந்துவன் சாத்தன் என்பாரை உரைசான்றவர் என்று புகழ்கிறார். பொய்யில்லாத நேரான மாறுபடாத நிலையான சொல் உரைப்பவர் என்பது அதன் பொருள்.
கொங்கு மண்டல சதகம்:
"சுந்தரன் பாடல் தமிழ்தனைக் கேட்டவர் தூது சென்று
புந்தியி லெண்ணி மகிழ்ந்தவர் கூறவும் பொய்யென்றகை
சந்தேகந்தீர வயிற்றையும் பீறித்தன் நாவரிந்து
வந்ததும் அந்துவ கோத்திரன் வாழ்கொங்கு மண்டலமே."

துறை: வஞ்சினக் காஞ்சி.
பாடியவர்: ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்

- கம்பநாத சுவாமிகள்
சுந்தர நாயனார் பாடிய தமிழ்ப் பாடலைக் கேட்டு சிவ பெருமான் அவருக்காக பரவை நாச்சியாரின் ஊடல் தீர்க்க திருவாரூர் விதியில் சென்றதை அறிந்த அந்துவர் அதை எண்ணி மகிழ்ந்து பிறரிடர் கூறவும் அதனைக் கேட்டவர் அது பொய்யென்று சொல்ல, அதனை உண்மையென்று நிரூபித்தல் பொருட்டு தம் நாவை அறிந்தும், வாளால் வயிற்றைப் பீறிக்கொண்டும் சத்தியம் செய்தார் என்பது வரலாறு. அது கொங்கு மண்டலத்திற்கு மறையாத பெருமையாயும் அமைந்தது என்று சதகம் பாடுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...