ஞாயிறு, 19 மார்ச், 2017

அந்துவன் செல்லப்பன்

காங்கேய நாட்டு கீரனூரில் வாழ்ந்த காராள வம்சத்து கொங்க வெள்ளாளரில் அந்துவரில் பெத்தாக் கவுண்டர் மகன் செல்லப்ப கவுண்டர்.

அவரின் குதிரையேற்ற திறனையும், எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் போர்த் திறனையும், மக்களைக் காக்கும் முறைமையும், செந்தமிழ் போற்றும் முறையும் பற்றி கீழ்க்காணும் பாடல் புகழ்கிறது.


வண்டுற்ற சோலைதிகழ் நாகயம் பதியினில்
வலமிட்டு வாளியிட்டு
வல்லயத் தருகிட்டு சவரிதுப் பாச்சியில்
வங்களப் பச்சையிட்டு
அண்டத்தில் மணிகட்டி மின்சல்லி பின்சல்லி
அணிசல்லி ரேக்குமிட்டு
அழகுபொன் முகமிட்டு வாகார மிட்டுமே
அதிகவெகு சுட்டிகட்டி
கண்டத்தில் விருதிட்டு முகத்துக்கண் ணாடியில்
காலத்தின் நீலிமெச்சும்
கருதிட்டுத் துட்டரை எதிரிட்டு வெட்டியே
கடியபரி முனைபெற்றவன்
செண்டுற்ற புகழ்பெற்ற கீரைநகர்ப் பெத்தான்
செல்லப்ப மகிபாலனே
தென்வஞ்சி நகராளும் மங்கைநகர் அதிபனே
செந்தமிழ்க்கு உற்றதுணையே!

பொருள்:

வண்டுகள் உறையும் சோலைகள் திகழ்கின்ற பழமையான பதியான நாகம்பள்ளியில் ஒப்பனைகளுடன் ஆயத்தமாக செருக்களம் செல்லவும் பகைவரை வெட்டிச் சாய்க்கவும் வலிமையான குதிரைகள் பல பெற்றவன் - (யாரென்றால்)
பூங்கொத்துகள் நிறைந்த புகழ் பெற்ற கீரனூரைச் சேர்ந்த பெத்தாக் கவுண்டர் மகன் செல்லப்பன் என்னும் அரசனே!
அவனே தென்வஞ்சி நகரை ஆள்பவனும் மங்கை நகர்க்கு தலைவனும் செந்தமிழுக்கு உற்ற துணைவனும் ஆவான்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...

யது குல சேரர் (எனும்) வஞ்சி வேள் அந்துவர்

௳ தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியரை முறையே அக்னி வம்ச, சூரிய வம்ச, சந்திர வம்சம் என்று சொல்வதுண்டு. இதில் சேரர்களை அக்னி வம்சம் என...