கோத்திரம் என்பது ஆண் வழி மரபினைக் குறிக்கும் வம்சாவளி மரபு ஆகும். இது தொன்முதிர்குடிகளுக்கே உரிய உயரிய பண்பாடு.
தனது வம்சத்தின் முதல்வனைக் கொண்டு வழிவழியாய் வந்த அவன் வம்சத்தின் மக்களை அவனது கோத்திரம் என்பர். இவை பல்கிப் பெருகி கிளைப்பதும் உண்டு.
கொங்க வெள்ளாளர் கங்கையின் மைந்தராரய் பிறந்து பெருகியதால் கங்கா குலத்தினர் ஆவர்.
கொங்க வெள்ளாளர் கோத்திரத்தை குலம் என்றும் கூட்டம் என்றும் அழைப்பர். கோத்திரப் பெயரோடு குலம் எனப்படுதலும், கூட்டம் என்று அழைப்பதும் அக்கோத்திரத்தாரின் பெருக்கம் பற்றியதாகும். கம்பர் காலத்தில் வெள்ளாளர்களுக்கு மூவேந்தர் முன்னிலையில் கோத்திரம் வகுத்து காணிகள் அமைக்கப்பட்ட செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன.
ஒரே கோத்திரத்தில் பிறந்தோர் அண்ணன், தம்பி, பங்காளி, தாயுதுகாரர் ஆவர்.
அதே போல கங்கா குலத்தைச் சேர்ந்த வேறு கோத்திரத்து மக்களை மாமன் மச்சினன் என்று உறவு பாராட்டுவதும் நமது பண்பாடு ஆகும்.
'குலம் அறிந்து கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு' என்பது பழமொழி.
தொல்காப்பியரும்...
"கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே"
- தொல்காப்பியம் (பொருள், கற்பியல்-1)
எனக் கூறுகிறார்.
பொருள்:
கற்பு எனப்படுவது திருமணத்தோடு இணைய
கொள்ளும் உரிமை உடைய மரபைச் சேர்ந்த ஆண்மகன் பெண்ணைக்
கொடுக்கும் உரிமை உடைய மரபைச் சேர்ந்தவர் கொடுக்கக் கொள்வது ஆகும்.
திருமணத்தின் போது குலம் கோத்திரம் அறிந்து திருமணம் செய்யும் பொருட்டே குலங்கோதுதல்(குலம்+கோத்திரம் ஓதல்) என்னும் தனி சீர் கொங்க வெள்ளாளரில் உண்டு.
அதே போல கோயிலில் அர்ச்சனை செய்யும் போதும், தென்புலத்தாருக்கு (இறந்துபட்ட முன்னோர்) சிரார்த்தம் செய்யும்போதும் (திதி கொடுத்தல்) குலம் கோத்திரம் சொல்லியே செய்யப்படுவது முறையாகும்.
நற்குடியாம் கங்கா குலத்தில் கோத்திரங்கள் பலவாம்.
கம்பர் வதுவை வரிப் பட்டயம் 64 கோத்திரங்கள் என தெரிவிக்கிறது.அழகுமலைக் குறவஞ்சி 141 கூட்டப்பெயர்களைப் பட்டியலிடுகிறது. இன்று கிடைக்கும் ஆதாரங்களின்படி 60க்கும் மேற்பட்ட கூட்டங்கள் காணியாட்சிக் கோயில்களுடன் இனங்க்கானப்பட்டு செந்தலை வெள்ளாளர் என்று உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
கொங்க வெள்ளாளர் (செந்தலை/தென்திசை வெள்ளாளர்) -
குலம் - கங்கா குலம்.
கோத்திரங்கள்:
ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர் ஒரு சில காரணங்களால் பிற்காலத்தில் வேறு இடம் சென்றோ வேறு சில காரணங்களாலோ சிறப்பு பெயர் பெற்றிருந்தாலும் பங்காளிகளாகவே கருதப்படுவர்.
உதாரணம்: கன்னன் - கன்னந்தை, முழுக்காதன்-பிறழந்தை/பொருள்தந்தான், சாத்தந்தை-பூச்சந்தை.
அதே போல "கொழுக்கட்டைக்கு தலவு இல்ல; கொங்கனுக்கு முறைமயில்ல" என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அதாவது ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தைச் சேர்ந்த குடும்பம் திருமண உறவுகளால் ஒரு வகையில் சித்தப்பன் ஆகிறது, இன்னொரு வகையில் மாமனும் ஆகிறது. அதனால் கூட்டம் வேறு என்றால் அந்தக் குடும்பத்தில் பெண் கட்டலாம் என்பது வழக்கமாகும். அதனைப் பகர வந்ததே இந்த பழமொழியாகும்.
ஆனால் அதே நேரம் தாயின் உடன்பிறந்த சகோதரிமார்கள் இன்னொரு தாய் என்ற வகையில் அவர்களின் பெண்கள் நமக்கும் சகோதரிகளாவே போற்றப்படும் வழக்கம் இன்றும் பேணப்படுகிறது.

1 | அழகன் |
2 | அந்துவன் |
3 | ஆந்தை |
4 | ஆவன் |
5 | ஆதி |
6 | ஆடன் |
7 | ஈஞ்சன் |
8 | எண்ணன்/எண்ணை |
9 | ஒழுக்கன் |
10 | ஓதாளன் |
11 | கணக்கன் |
12 | கணவாளன் |
13 | கன்னன் |
14 | கன்னந்தை |
15 | கல்லி |
16 | காரி |
17 | காடன்/காடை |
18 | கீரன்/கீரை |
19 | குழாயன் |
20 | கூரன்/கூரை |
21 | கோவேந்தன் |
22 | சாத்தந்தை |
23 | செங்கண்ணன் |
24 | செங்குன்னி |
25 | செம்பன் |
26 | செம்பூதன் |
27 | செல்லன் |
28 | செவ்வாயன் |
29 | செவ்வந்தி |
30 | சேரன் |
31 | சேரலன் |
32 | சேடன் |
33 | தனஞ்செயன்/தழிஞ்சி |
34 | தூரன் |
35 | தேவந்தை/தேவேந்திரன் |
36 | தோடன் |
37 | நீருண்ணியன் |
38 | பனங்காடன் |
39 | பண்ணன்/பண்ணை |
40 | பதறியன் |
41 | பவளன் |
42 | பயிரன் |
43 | பதுமன் |
44 | பணையன் |
45 | பாண்டியன் |
46 | பில்லன்/புல்லன் |
47 | பிறழந்தை/பொருள்தந்தான் |
48 | பூசன் |
49 | பூச்சந்தை |
50 | பூந்தை |
51 | பெரியன் |
52 | பெருங்குடி |
53 | பொன்னன் |
54 | மணியன் |
55 | மாடன் |
56 | முத்தன் |
57 | முல்லை |
58 | முழுக்காதன் |
59 | மேதி |
60 | வண்ணக்கன் |
61 | வாணன் |
62 | விளையன் |
63 | வில்லி |
64 | விழியன் |
65 | வெண்டுவன் |
66 | வெள்ளம்பன் |
67 | வேந்தன் |
ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர் ஒரு சில காரணங்களால் பிற்காலத்தில் வேறு இடம் சென்றோ வேறு சில காரணங்களாலோ சிறப்பு பெயர் பெற்றிருந்தாலும் பங்காளிகளாகவே கருதப்படுவர்.
உதாரணம்: கன்னன் - கன்னந்தை, முழுக்காதன்-பிறழந்தை/பொருள்தந்தான், சாத்தந்தை-பூச்சந்தை.
அதே போல "கொழுக்கட்டைக்கு தலவு இல்ல; கொங்கனுக்கு முறைமயில்ல" என்று ஒரு பழமொழி வழங்குகிறது. அதாவது ஒரு கூட்டத்தாருக்கு இன்னொரு கூட்டத்தைச் சேர்ந்த குடும்பம் திருமண உறவுகளால் ஒரு வகையில் சித்தப்பன் ஆகிறது, இன்னொரு வகையில் மாமனும் ஆகிறது. அதனால் கூட்டம் வேறு என்றால் அந்தக் குடும்பத்தில் பெண் கட்டலாம் என்பது வழக்கமாகும். அதனைப் பகர வந்ததே இந்த பழமொழியாகும்.
ஆனால் அதே நேரம் தாயின் உடன்பிறந்த சகோதரிமார்கள் இன்னொரு தாய் என்ற வகையில் அவர்களின் பெண்கள் நமக்கும் சகோதரிகளாவே போற்றப்படும் வழக்கம் இன்றும் பேணப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...