பண்டைய தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை என ஐந்து மண்டலங்கள் இருந்தன. மண்டலங்கள் என்பன ஆறு, மலை, தட்பவெட்ப வகைப்பாடுகளால் ஒன்றுக்கொன்று வேறுபட்டு அமைந்த தன்னிறைவான பழமையான பகுதிகள் ஆகும். கொங்க வெள்ளாள கவுண்டர்கள் கொங்கு மண்டலத்தில் வசித்து வரும் உழவை முதல் தொழிலாகக் கொண்ட பழங்குடிகள் ஆவர். கொங்க தேசம் சேரரின் பகுதியாகவே ஆதிகாலந்தொட்டு விளங்கியது. கொங்கன் என்றாலே அது சேரனைக் குறிப்பதாகும்.
ஆதியிலே தேவர்கள், ரிஷிகள், மனிதர்களெல்லாம் பசியால் வாடியிருந்த காலத்து ஈசனிடம் சென்று பசிப் பிணி நீக்க வேண்டினர். ஈசன் தன் பார்வையால் விஷ்ணுவிடம் குறிப்பறிவித்தார். விஷ்ணு தனது அம்சங்களில் ஒன்றை பூமிக்கு அனுப்பி கங்கையின் கரையில் அவளுக்கு மகனாகத் தோன்றினார். ஈசனிடம் அன்பினவனாக, கையில் ஏருடனும் பஞ்சாட்சரம் செபிக்கும் வாயுடனும் மிகுந்த அழகினனாக உலகில் வஞ்சனையை ஒழிக்கும்படிக்கு மரபாளன் தோன்றினான் என்று வேளாள புராணம் பாடுகிறது.
காங்கேயன் (கங்கையின் புதல்வன்), முர்தகபாலன் (ஏரினைக் காப்போன்), பூபாலன் (பூமியினைக் காப்பவன்) என்று பேர்கள் பெற்றான். அவனுக்கு குருவாக இருந்து சகல கலைகளும் அறிவித்தார் போதாயன மகரிஷி. பின்னர் கங்கை தன் குலம் தழைக்க இந்திரன் புதல்வியையும், குபேரன் புதல்வியையும் மணம் முடித்து வைத்து புத்திர சம்பத்தும் வம்ச விருத்தியும் பெற்று, கோத்திரம் சூத்திரம் வகுத்து சீர் முறைகள் வகுத்து வழிவழியாய் கடைபிடித்து வரலாயினர்.
வெள்ளத்தை ஆளும் தன்மையால் வெள்ளாளர் என்றும், மழை நீரை ஆளும் தன்மையால் காராளர் என்றும், உலகோர் தொழில் நடக்க அவர் தம் பசியறுத்து உதவ இவர் தம் தொழில் நடத்துவதால் வேளாளர் எனவும் அழைக்கப்பட்டனர். குடியாகிக் கோத்திரம் வகுத்து கூடி வாழ்ந்ததால் நற்குடி நாற்பத்தெண்ணாயிரம் என்றும் பெறலாயினர்.
கங்கை குலத்தார் ஏர்கொண்டு பார் உழும் பூவசியம், ஆநிரை ஓம்பும் கோவசியம், இவற்றால் பொருளீட்டும் தனவசியம் என்னும் மூவைசியத் தொழிலுக்கும் உரியவர் ஆவர். பழமையான நிகண்டுகள் வேளாளரை குறுநில ஆட்சிக்குரிய வேளிர், இளங்கோக்கள் என்றும் உழுவித்துண்ணும் வைசியரென்றும், உழுதுண்ணும் நான்காம் பாலினர் என்றும் வகைப்படுத்துகிறது.
வேளிர், பூபாலர், இளங்கோக்கள், கங்கை குலத்தரசர், களமர், உழவர், ஏர் வாழ்நர், மேழியர், விளைப்பவர், பெருக்காளர், பார்மைந்தர், காராளர், வேளாளர், கொடையினர், சதுர்த்தர், வார்த்தையாடலில் வல்லோர், தாளினில் வந்தவர் என்பன நிகண்டுகளால் அறியப் படும் வேறு பெயர்கள் ஆகும்.
கல்வெட்டுகளில் வெள்ளாளர் என்றே பயின்று வரும். சோழர் ஆட்சியின் கீழ் அவர் எழுதிட்ட மெய்கீர்த்திகள் வெள்ளாளர் தம் வீரத்தையும் கொடையையும் பக்திச் சிறப்பையும் மேன்மையையும் புகழ்வனவாகும்.
வேள், காமிண்டன், முதலி, அரயன் என்பன வழிவழியாய் கொங்க வெள்ளாள மரபினர் தரித்து வந்த பட்டங்கள் ஆகும். உடையார், ஆள்வான் என்ற பட்டத்துடனும் சிலர் விளங்கியுள்ளனர். இவற்றுள் காமிண்டன் என்றால் 'காக்கும் வீரன்' எனப்பொருள் படும். காமிண்டன் என்பதே பின்னாளில் கவுண்டன் எனத் திரிபுற்றது என்பர். கொங்கு நாட்டு வெள்ளாளரை கவுண்டர் என்று அழைப்பது இது பற்றியே ஆகும்.
கொங்க வேளாளர் என்றாலே பெரும்பான்மையாக வசிக்கும் செந்தலை கவுண்டர்-தென்திசை வெள்ளாளர்களைக் குறிக்கும். பால வெள்ளாளர்(ஒற்றைச் சங்கு-இரட்டைச் சங்கு வெள்ளாளர்), படைத்தலைக் கவுண்டர், நரம்புகட்டி வெள்ளாளர் (வடகரை வெள்ளாளர்) முதலியோரும் கொங்க நாட்டில் வசிக்கும் வெள்ளாளர்கள் ஆவர். அவர்களும் நமக்குத் தொடர்புடையவரே ஆயினும் அவர்களுடன் கொண்டு கொடுத்துக் கட்டும் மணவினைகள் இல்லை. அவர்களும் கொங்க வெள்ளாளர் என்றே அழைக்கப்படுவர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன ...